திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (18:14 IST)

ராகுல்காந்தியை சந்தித்த கிஷோர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியை தேர்தல் வியூக விபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூக நிபுணராகச் செயல்பட்டவர் பிரஷாந்த் கிஷோர்.

இவரது வியூகம் பலித்தது. இந்நிலையில்  இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியை தேர்தல் வியூக விபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர்ஃப் ப்ரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்ததாகத் தெரிகிறது.
மேலும், டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.