1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar Talks about DMK Rally

ஆவிகள் ஸ்டாலினை சும்மா விடாது! – பயமுறுத்தும் ஜெயக்குமார்!

Tamilnadu
இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு பரிகாரம் செய்யவே ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி தமிழகத்திலும் திமுக சார்பில் 23ம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் கட்சிகள் மற்றும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ”ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட நினைக்கிறார். ஆனால் இலங்கை தமிழர்கள் ஆவி ஸ்டாலினை சும்மா விடாது படாதபாடுபடுத்தும்” என பேசியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
துண்டு சீட்டு படிக்க தெரியாதவர் இதை படிப்பாரா!? – மறைமுகமாய் விமர்சிக்கும் எச்.ராஜா