செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:45 IST)

சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர் ... ரசிகர்கள் மகிழ்ச்சி...

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் ஒருவர் சிம்பு. வெற்றி நடிகராக வலம் வந்த சிம்புவுக்கு சமீப காலமாக எந்தப் படமும் பெரியதாக வெற்றியடையவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபு , சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த மாநாடு படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  டிராப் செய்தார்.
 
அதையடுத்து வெங்கட் பிரபு வெப் சீரியல் இயக்குவதற்காகச் சென்றார். சிம்புவும் வெளிநாடு சென்றதாக தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, சிம்பு காம்பினேசனில் மீண்டும் மாநாடு படம் தொடங்கவுள்ளதாகவும் அதற்காக சிம்பு தீவிர உடற்பயிற்சி செய்து உடலை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளிகிறது.

இப்படத்தில், சிம்புவுக்கு வில்லனாக சுதீப் ( நான் ஈ பட வில்லன் ) நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.
சிம்பு ஹிட் படம் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆனது என்பதால்  சிம்பு  நடிக்கும் மாநாடு படம் குறித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.