டெல்லியில் நில அதிர்வு: மக்கள் பீதி!!
டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.
சற்றுமுன் டெல்லி மற்றும் புற நகர் பகுதிகளிலும், ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை ஆடின. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதே போல நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நில அதிர்வு ரிகடர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.