1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Doors Permanently Closed for Congress Alliance, Declares DMK Leadership

இனி காங்கிரஸ் உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. திமுக திட்டவட்டம்...

rahul vijay
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவு இனி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "முடிந்தது முடிந்ததுதான்; இனி காங்கிரசுடன் எந்தவித சமரசமும் அல்லது ஒட்டுப்போடும் பேச்சுவார்த்தையும் கிடையாது" என்று டெல்லியில் திமுக தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர்.
 
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்தபோதே இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு முற்றிலும் முறிந்துவிட்டது. எனினும், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக தன் பலத்தை நிரூபிக்க திமுகவின் ஆதரவு அவசியம் என்பதால், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சமாதான தூது அனுப்பி வந்தனர்.
 
இதற்கு திட்டவட்டமாக பதிலளித்துள்ள திமுக மூத்த தலைவர்கள், மாநில அளவில் தவெகவுக்கு பின்னால் சென்றுவிட்டு டெல்லியில் ஆதரவு கேட்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டனர்.
 
அதேநேரத்தில், மக்கள் நலன் சார்ந்த மற்றும் ஜனநாயக போராட்டங்களுக்கு காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரப்படும் என்றும், ஆனால் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு அல்லது 'இந்தியா' கூட்டணியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கெடுப்பது போன்ற எதற்கும் இடமில்லை என்றும் திமுக தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸுக்கான கதவுகள் நிரந்தரமாக அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநில கட்சிகளை திரட்டி மாற்று சக்தியாக களம் காண்பதே திமுகவின் திட்டமாக மாறியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இது வெறும் இடைத்தேர்தல் அல்ல.. தவெக, திமுக, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போர்க்களம்..