1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. iuml giving support to tvk vijay

தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு!.. 120 எம்.எல்.ஏக்கள் கிடைச்சாச்சி!..

vijay
தவெக ஆட்சியில் அமருமா? விஜய்க்கு போதுமான ஆதரவு கிடைக்குமா? விஜய் முதல்வராவாரா? என கடந்த 4 நாட்களாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சம்பவங்கள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தை 2 என ஆதரவு கொடுத்ததால் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்தது. எனவே, விஜய் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. இருக்கிறது இந்நிலையில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எனவே தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு எண்ணிக்கை 120ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை மூன்று முறை தவெக நிர்வாகிகள்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை நேரில் சந்தித்து பேசினார்கள். நேற்று ஆதரவு என  அறிவித்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஆதரவு இல்லை என் அறிவித்தார் காதர் மொய்தீன். தற்போது திருமாவளவன் உள்ளிட்ட எல்லாருமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். எனவே 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தோடு தவெக தலைவர் விஜய் விரைவில் ஆளுநரை ச்சந்திக்கவிருக்கிறார்
அடுத்த கட்டுரையில்
விஜயை சந்திக்க மறுத்த ஆளுநர்!.., யுடர்ன் போட்டு வீட்டுக்கு திரும்பிய விஜய்!...