1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Investigation on the 30 person passed in TNPSC whose were wrote in same centre

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் பாஸ் ஆனது எப்படி?? விசாரணை தீவிரம்

தமிழகம்
குரூப் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ்.சி விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நடத்தி வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ். விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வர்களின் விடைத் தாள்களை ஆய்வு செய்வதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
யார் இந்த ஏ.ஆர். ரஹ்மான்? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு