1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 5 ஜனவரி 2020 (11:31 IST)

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்படும் - உதய் பிரதாப் சிங்

சமீபத்தில் பாஜக அரசால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்ட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
மத்திய அரசால் குடியுரிமை திருத்த  சட்டம்  இயற்றப்பட்டாலும் , பஞ்சாப், மேற்கு வங்கம், கேரள, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அதை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது மத்திய அரசின் கடமை ஒருவேளை சட்டத்தை அமல்படுத்தாவிடில் 356 வது சட்டப் பிரிவின்படி அந்த மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்படும் என பாஜக எம்.பி, உதய் பிரதாப் சிங் கூறியுள்ளார்.