செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (10:46 IST)

ஆளுநர் பேச்சால் ஒரு பிரயோஜனமும் இல்ல... ஸ்டாலின் காட்டம்!

தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என காட்டமாக பேட்டியளித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடர். மேலும் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடஎ என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது. 
 
பன்வாரிலால் புரோஹித் துவக்கதிலேயே எனது உரையை தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என கூறினார். அதோடு, பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை பயன்படுத்துங்கள்  எனவும் கூறினார். 
 
ஆனால், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 
 
வெளியேறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என தெரிவித்தார். அதோடு, தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை எனவும் காட்டமாக தெரிவித்தார். 
 
ஆனால், ஆளுநரோ இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.