1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. husband blame instgram vidoes spoiled his life

சினிமா வாய்ப்புக்காக கிளுகிளுப்பு வீடியோ!.. மன உளைச்சலில் கணவர்...

video
கடந்த சில வருடங்களாகவே இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது. பல குடும்பப் பெண்களும் கூட இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அதிலும் சிலர் அதிக ஃபாலோயர்ஸ்களை பெறுவதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறார்கள்.

அதன்பின், விளம்பர வீடியோக்களை வெளியிடுவது, சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். ஒரு பக்கம் சினிமா வாய்ப்பை பெறுவதற்காக சில குடும்பப் பெண்கள் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அப்படி வெளியிட்ட ஒரு பெண்னால் அவரின் கணவர் மன உளைச்சல் அடைந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்..

video

சுபவர்தராஜ் என்கிற பெண் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரின் கணவர் வேதமூர்த்தி. இருவரும் சேர்ந்து கூட அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்கள். ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சுபவர்தராஜ் சற்று கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டதாக தெரிகிறது.

இதை கணவர் வேதமூர்த்தி கண்டித்துள்ளார். சுபவர்தராஜுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால், அவர் கேட்கவில்லை. இந்நிலையில்தான், வேதமூர்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்  அதில் ‘இந்த இன்ஸ்டாகிராமால் என் குடும்பமே நாசமாக போய்விட்டது.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடாததையெல்லாம் என் மனைவி செய்கிறார். அவரின் அம்மாவிடமும் இதை கூறினேன்.. அவரும் கண்டிக்கவில்லை..

ஒரு கட்டத்தில் நான் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று சொன்னதால் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும் அவருக்கு நெருக்கமான ஒரு ஆண் நண்பர் 10 பேரை கூட்டிவந்து என்னையும், என் மகளையும் கொலை செய்வதகாக என் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். இப்போது எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என என் மனைவி சொல்கிறார். என் வாழ்க்கையே நாசமாக போய்விட்டது.. சினிமாவில் நடிப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை.. ஆனால் இப்படி மோசமாக உடலைக் காட்டி நடிக்க வேண்டாம் என்றுதான் என் மனைவியிடம் கூறினேன்’ என்று அந்த வீடியோவில் வேதமூர்த்தி புலம்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை ஸ்டார்ட்!.. புதுசா புதுசா வராங்களே!...