1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police tried to arrest muthukumaran

திருமண மோசடி புகார்.. தலைமறைவான முத்துக்குமரனை தேடும் போலீஸ்...

muthukumaran
பேச்சாளர், இன்ஸ்டா பிரபலம், பிக்பாஸ் சீசன் வெற்றியாளர் என நெட்டிசன்களால் அறியப்பட்டவர் முத்துக்குமரன். கடந்த திமுக ஆட்சியில் திமுக ஆதரவாளராகவும் இவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்தான், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் வகிதா என்கிற பெண் சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

அதில் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்திருக்கும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய முத்துக்குமரன் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அதன்பின் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பரபரப்பு புகார் கூறை வீடியோக்களை வெளியிட்டார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் வகிதா புகாரளித்தார். இதையடுத்து முத்துக்குமரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. எனவே முத்துக்குமரனை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது தெரிந்து முத்துக்குமரன் தலைமறைவாகிவிட்டார். செல்போன் எண்ணை வைத்து முத்துக்குமரனை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சினிமா வாய்ப்புக்காக கிளுகிளுப்பு வீடியோ!.. மன உளைச்சலில் கணவர்...