எல்லாம் பகல் வேஷமா?!.. விளைவு மோசமாக இருக்கும்!.. விஜயை எச்சரித்த நயினார் நாகேந்திரன்..
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் வருகிற 24-ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் அன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி கொடுத்தது.
இந்த உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில் 20ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவில் சில பத்திகளில் உள்ள அம்சங்களை சீராய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி அங்கே தீபம் ஏற்றினால் பல வருடங்களாக நிலவிவரும் நடைமுறை மாற்றி அமைக்கப்படும், தர்காவுக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு இடத்தில் இந்த விளக்கு ஏற்றினால் அது சட்ட ஒழுங்கு பிரச்சனையை கொண்டு வரும் என்று கூறப்பட்டிருந்தது..
இந்நிலையில், இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஜோசப் விஜய் அவர்களே.. வேல் வழங்குகிறீர்கள்.. மூகாம்பிகை கோவிலுக்கு போகிறீர்கள்.. இதெல்லாம் பகல் வேஷமா? திருப்பரங்குன்றம் தீபத்தை தடுத்து நிறுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்? சிறுபான்மையினர் ஓட்டு வாங்கிதான் லாபம்.. தொடர்ந்து தவறு செய்கிறீர்கள். இதன் விளைவு மோசமாக இருக்கும் என பேசியிருக்கிறார்.