வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த காதலர்.. காதலி செய்த திகில் சம்பவம்..!

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த காதலர்.. காதலி செய்த திகில் சம்பவம்..!
உத்தர பிரதேச மாநிலம் பலியாவில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆசம்கார் மாவட்டத்தை சேர்ந்த பங்கஜ் குப்தா என்ற இளைஞர், அண்டை கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் உறவை முறித்து கொள்ள முயன்றபோது, பங்கஜ் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த மிரட்டலால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது சகோதரர் மற்றும் அண்ணி ஆகியோருடன் இணைந்து பங்கஜை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, பங்கஜை ஒரு திருமண விழாவிற்கு வருமாறு நயவஞ்சகமாக அழைத்து, அங்கு அவரை நெரித்து கொன்றனர். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் அமிலத்தை ஊற்றி சிதைத்துவிட்டு உடலை வீசி சென்றனர். 
 
பிப்ரவரி 10-ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, போலீஸ் விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளியாகின. தற்போது அந்தப் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
Edited by Siva