1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in chennai yesterday night

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. இன்றும் மழைக்கு வாய்ப்பு என தகவல்..!

சென்னை
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னை முழுவதுமே குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று பகல் முழுவதும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென இரவு 7 மணிக்கு மேல் வானம் இருண்டு சென்னையில் பல பகுதிகளில் கன மழை பெய்தது. 
 
சென்னை மந்தவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், தியாகராய நகர், தாம்பரம், வடபழனி, அண்ணா நகர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது. 
 
பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென இரவு பெய்த மழை காரணமாக சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழை நேரத்தில் திடீரென  மின்சாரம் தடைப்பட்டதால் சில இடங்களில் பொதுமக்கள் அவதி உட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சென்னையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சிங்கப்பூர் முழுக்க அதிரடி சோதனை: ரூ.6000 கோடி, ஆடம்பர கார்கள், வீடுகளை கைப்பற்றிய காவல்துறை