வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (15:41 IST)

தமிழ்நாட்டில் நாளை 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..!

bus
தமிழ்நாடு முழுவதும் நாளை 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
 
நாளை வார இறுதி நாள் மற்றும் தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகமாக வரும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை தமிழ்நாட்டில் மொத்தம் 1250 க்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் இருந்து மட்டும் நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் நாளை மறுநாள் முன்னூற்றி ஐம்பது சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.  
 
அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
நாளை வெளியூர் செல்லும் பயணிகள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva