திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (06:58 IST)

தடைபட்ட ஏ ஆர் ரஹ்மான் இசைக் கச்சேரியின் புதிய தேதி அறிவிப்பு!

இந்திய சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்,  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற பிறகு அவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த அவர் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் தமிழ் படங்களில் ஆர்வம் காட்டுகிறார்.

இந்த நிலையில்,  சென்னை பனையூரில்  ஏ.ஆர்.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அதே இடத்தில் இப்போது செப்டம்பர் 10 ஆம் தேதி அந்த நிகழ்ச்சி நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.