திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:26 IST)

அப்பா மாதிரிதான் ரஜினி சாரை பார்க்கிறேன்- ' ஜெயிலர்' பட நடிகர்

jailer
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 

அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.  ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரம் வசூல் குறித்த நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி,  ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நெல்சன், வசந்த் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய வசந்த் ரவி,

''எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோசமான  தருணம் இன்றைக்கு. என் முதல் நன்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், கண்னன் சார் ஆகியோருக்கு தெரிவிக்கிறேன்.

நெல்சன் சாருக்கு நன்றி. இப்படத்தில்   நடிக்கர் சார் என்னைக் கூப்பிடும் போது, 'இது ரொம்ப இம்பார்டண்ட்டான கேரக்டர்….அதைதாண்டி  பெர்பாமெண்ஸ்க்கு நிறைய இடம் இருக்குது படத்துல இது  நல்ல பேரு கொடுக்கும்' என்றார். அதேபோல் நல்ல பேர் கிடைத்திருக்குது.  'ரத்தமாரே' பாடல், ரஜினியுடன் நடிக்க, அனிருத் இசையில் ஒரு பாடலில்  நடிக்க எனக்கு சான்ஸ் கிடைத்துள்ளது. தரமணி, ராக்கி ஆகிய படங்களை தாண்டி இப்படம்  எனக்கு அமைந்துள்ளது.

ரஜினி சாருக்கு மிகவும் நன்றி…அவருடன் பழகிய நாளை மறக்க முடியாது. தினமும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷூட்டிங் செல்வேன். படம் முடியும் கடைசி நாளில், எனக்கு எமோஷனலா இருக்குது…உங்களுடன் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது என்றார். அதற்கு  அவர்' மீண்டும் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்' என்று கூறினார்.

அவரை நான் சார் என்று சொன்னாலும், அவரை அப்பா மாதிரிதான் ரஜினி சாரை  பார்க்கிறேன் என்று கூறினார்.