1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain: 3 Districts schools holiday

கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

heavy rain
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்ததை அடுத்து நேற்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்தவரையில் ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது

இந்த நிலையில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இன்னும் ஒருசில மாவட்டங்களில் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாகையில் கடல் சீற்றத்துடன் கனமழை பெய்துவருதால், நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காரைக்கால் உள்ளிட்ட 64 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன
அடுத்த கட்டுரையில்
மு,க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ரகசிய சந்திப்பா? மேல்முறையீடு குறித்த மர்மம்