1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. November 5 holiday announced TN Govt

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

tn govt
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனால் நவம்பர் 5ஆம் தேதி திங்கட்கிழமை வேலை பார்த்தே ஆக வேண்டும் அன்றைய தினம் விடுமுறை எடுக்கக்கூடாது என்று பல தனியார் நிறுவனங்கள் கூறி வந்ததாக கூறப்பட்டது. இதனால் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் நிலை திண்டாட்டமாக இருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.