சோபியா விவகாரம்: மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு

sophia
Last Modified வியாழன், 1 நவம்பர் 2018 (22:56 IST)
தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து
மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி
சம்பவம் நடந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா காட்சிகள், விமான பயணிகளின் பட்டியல் ஆகிய விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஆகியோர்களுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :