1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja says about vairamuthu and dravidans

வைரமுத்து படிப்பறிவில்லாதவர், திராவிடர்கள் முட்டாள்கள்.. எச் ராஜா

H Raja
வைரமுத்து படிப்பறிவில்லாதவர் என்றும் திராவிடர்கள் முட்டாள்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
மயிலாடுதுறையில் நேற்று நடந்த திருமண விழா ஒன்று கலந்து கொண்ட எச் ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது  ’ஹிந்து தர்மத்திற்கு தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்தான் சனாதன தர்மம் என்றும் சனாதன தர்மம் 15,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று ஜெர்மனி ஆய்வாளர் தெரிவித்துள்ளார் 
 
 வள்ளுவர் சொன்னதைத்தான் உதயநிதி சொல்லி இருப்பதாக கவிஞர் வைரமுத்து நேற்ற கூறியுள்ளார். செய்யும் தொழிலில் அடிப்படையில் வேற்றுமை இல்லை என்பதை செய்தொழில் வேற்றுமை யான் என வள்ளுவரும் கண்ணபிரான் செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் நான்கு வர்ணங்களை உருவாக்கியதாக கூறியுள்ளனர் 
 
பகவத் கீதையில் சொன்ன விஷயம் எதையும் வள்ளுவர் விடவில்லை, வைரமுத்து படிப்பறிவு இல்லாதவர் என்று எச். ராஜா கூறினார்.  மேலும் டெங்கு போன்ற சனாதனத்தை அழித்து விடுவேன் என்று இந்துக்களை இனப்படுகொலை செய்வேன் என்று சொன்னதை வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வோம் என்றும் திராவிடர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் எச். ராஜா தெரிவித்தார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி அவர்களே.. ஆட்டுத்தாடிக்கு பின்னால் ஒளிய முடியாது! – உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!