1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (09:48 IST)

இந்தியா ’பாரத்’தாக மாறும் - அன்றே கணித்த கபிலன் வைரமுத்து!!

இந்தியா எனும் பெயரை பாரத் என அப்போதே தனது படைப்பில் குறிப்பிட்டதாக கபிலன் வைரமுத்து டிவிட்.


இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல கருத்துகள், எதிர் கருத்துகள் நிலவி வருகின்றன. சமீபத்தில் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து ‘இந்தியா’ என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஜி20 மாநாடு விருந்து அழைப்பில் பாரதத்தின் குடியரசு தலைவர் என்ற வாசகம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரதமரின் Asean மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்பில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் பெயர் இப்படி மாறியிருக்கலாம் என்று நினைத்து எழுதினேன். அந்த எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

அதாவது முன்னர் அவர் எழுதிய கதை ஒன்றில் 2030களில் இருந்து கால ரயிலில் ஏறி பின்னோக்கி செல்லும் இந்தியன் 1920களின் சிறுவனிடம் பேசும்போது, நீங்க எந்த ஊரு என கேட்க அதற்கு அவர் பாரத் என பதில் கூறுவது போல எழுதியிருக்கிறார். இதனையே தற்போது குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் மட்டுமல்லாது கடந்த செப்டம்பர் 2ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் நடந்தபோது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் #BHARvsPAK (Bharat Vs Pakistan) என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தார். 

தற்போது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் “டீம் இந்தியா இல்லை #TeamBharat. வீரர்கள் "பாரத்" என்ற ஜெர்சியை அணிந்து கொள்கிறார்கள் என்று பதிவிட்டு பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவையும் டேக் செய்துள்ளார்.