1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. robo trying to attack human in russia viral video

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

robo attack
கடந்த பல வருடங்களாகவே விஞ்ஞானிகள் ரோபோ தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறார்கள்.. குறிப்பாக சீனாவில் அதிக அளவில் ரோபோக்களை உற்பத்தி செய்து பல துறைகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். பல ஹோட்டல்களிலும் கூட ரோபோக்கள் உணவுகளை பரிமாறும் வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்க்க முடிகிறது..

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் கூட இன்னும் 10 ஆண்டுகளில் 100 கோடி ரோபோக்கள் உருவாக்கப்பட்டு அவைகள் மனிதர்களின் வேலைகளை செய்ய துவங்கும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், ரஷ்யாவில் ஒரு ரோபோ விற்பனை செய்யும் கடையில் அதை வாங்க வந்த வாடிக்கையாளரை அந்த ரோபோவே தாக்க முயற்சி செய்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது..

ரோபோவை வாங்க வந்த அந்த நபர் ரோபோவை தள்ளி விடுகிறார்.. உடனே அந்த ரோபோ தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தவறான புரிந்து கொண்டு அந்த வாடிக்கையாளரை தாக்க முயற்சி செய்தது.. அங்கிருந்த ஊழியர் விரைவாக செயல்பட்டு ரோபோவை மடக்கி பிடித்து அதை ஆப் செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டிரைவிங் லைசென்ஸ் இனி டிஜிட்டல் மூலம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..