பாட்டிலுக்கு ரூ.10 வசூல்!.. ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!..
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதலே டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றவுடனேயே 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். அந்த கடைகள் அப்போது மூடப்பட்டன..
அதேபோல் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் தவெக அரசு இறங்கியது. டாஸ்மாக் ஊழியர்கள் 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்தார். ஆனால் அதில் பல நடைமுறைகள் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டது/..
ஏனெனில் கடை வாடகை, மின்சார கட்டணம், ஏற்று இறக்கு கூலி, உதவியாளர்களுக்கு சம்பளம், மதுபாட்டில்களை வைத்திருக்க குடோனை பராமரிப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்கு அரசு எங்களுக்கு பணம் கொடுப்பதில்லை.. இந்த பணத்தில்தான் செலவிடுகிறோம் என டாஸ்மாக் ஊழியர்கள் கூறினார்கள்..
டாஸ்மாக் ஊழியர் சங்கத்திற்கும் அரசுக்கும் இடையே இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனாலும் தற்போது வரை அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய 67 டாஸ்மார்க் பணியாளர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது அமைச்சர் விக்னேஷின் அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.