1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (09:06 IST)

சாதியைக்கூட மன்னிக்கலாம், ஆனால்.. நாங்குநேரி விவகாரம் குறித்து வைரமுத்து..!

vairamuthu
ஜாதியை கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது என கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: 
 
நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு
 
சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது
 
சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!
 
முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள்
 
Edited by Siva