திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (10:11 IST)

திருவள்ளுவரை கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? வைரமுத்து

vairamuthu
திருவள்ளுவரைக் கொண்டாடுபவர்கள் திருக்குறளை பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன் என கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் உதயநிதி சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவினர் அதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது:
 
சனாதனம் என்பதும்
சனாதன எதிர்ப்பு என்பதும்
காலங்காலமான கருத்துருவங்கள்
 
பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு
என்பது சனாதனக் கருத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு
 
திருக்குறளைத்தான்
உதயநிதி பேசியிருக்கிறார்
 
திருவள்ளுவரைக்
கொண்டாடுகிறவர்கள்
திருக்குறள் பேசிய
உதயநிதியை மட்டும்
எதிர்ப்பது ஏன்?
 
அரசியல்
 
Edited by Mahendran