வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:41 IST)

தினமலரின் ஒரு பதிப்பு ஊடக அறத்தை தாண்டியதற்காக வருந்துகிறேன்: வைரமுத்து

vairamuthu
தமிழக அரசு சமீபத்தில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. '
 
ஆனால் இன்று காலை தினமலரில் இந்த திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்பட பலர் இந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் இந்த செய்திக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதாவது:
 
காலை உணவுத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டரசு அறம்
செய்துகொண்டிருக்கிறது.
தலைமுறைகள் இதனால்
தலைநிமிரும் என்று
நல்லவர்கள் நம்புகிறார்கள்
 
அதைக் கொச்சைப்படுத்துவது
அறத்தின் ஆணிவேரையே
அறுப்பதாகும்
 
ஊடகங்கள் பண்பாட்டின் ஊற்றுக்கண்களாகத்
திகழ வேண்டும்
 
எதிர்மறைக் கருத்துக்களையும்
நல்லமொழியில்
வெளியிட வேண்டும்
 
தினமலரின் ஒரு பதிப்பு
அந்த ஊடக  அறத்தைத்
தாண்டியதற்காக வருந்துகிறேன்
 
இனிவரும் காலங்களில்
அது நல்ல தமிழ்
பயன்படுத்த வேண்டும்
என்று விரும்புகிறேன்
 
 
Edited by Mahendran