திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜனவரி 2026 (08:54 IST)

சிபிஐ விசாரணை கேட்டதே விஜய்தான்!.. இதுல என்ன பிரச்சனை?!.. ஹெச்.ராஜா கோபம்...

h raja vijay
கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்த போது ‘இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.. இந்த விசாரணைகள் உண்மை வெளியே வராது’ என்று சொல்லி தவெக தரப்பு உச்சநீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்தது.

அதை ஏற்று உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.. அதன்பின் இந்த வழக்கை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு நேரில் சென்று பல தகவல்களையும் சேகரித்தனர்.. அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடமும் பல தகவல்களை பெற்றனர். மேலும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் போன்ற பலரையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

மேலும் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பினர். அதை ஏற்று விஜய் நேற்று டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார். இதையடுத்து விஜய் பாஜக கூட்டணியில் இணையாமல் இருப்பதால்தான் மத்திய அரசு விஜயை மிரட்டிப்பார்க்க சிபிஐ விசாரணைக்கு அழைத்திருக்கிறது என சிலர் இங்கே பேசினார்கள்.

இந்நிலையில் இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டதே தவெகதான். இப்போது சிபிஐ அதிகாரம் விசாரித்து வருகிறார்கள்.. கண்டிப்பாக பலரிடமும் அவர்கள் கேள்விகளை கேட்பார்கள்.. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.. இதில் என்ன ஸ்பெஷல்? இதில் என்ன பிரச்சனை? இதை நீங்கள் ஏன் ஒரு பிரச்சினையாகவும், சர்ச்சையாகவும் மாற்றுகிறீர்கள்?.. அப்படி என்றால் உங்கள் உள்ள நோக்கம் என்ன?’ என்று பொங்கியிருக்கிறார்.