எல்லா பக்கத்திலும் எதிர்ப்பு!.. விஜய் ஜோசியர் அரசு பதவி பறிக்கப்படுமா?...
பிரபல ஜோதிடராக வலம் வருபவர் ரத்தன் பண்டிட். யாரை வேண்டுமானாலும் என்னால் பெரிய நபராக மாற்றமுடியும் என பல வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே அவர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரின் ஆலோசனைப்படியே தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் திருச்செந்தூர் கோவில், சாய் பாபா ஆகிய கோவிலுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஜோதிடர் ரத்தன் பண்டிடுக்கு சிறப்பு அதிகாரி என்கிற பிரிவில் அரசு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் பலரும் இதை கடுமையாக நக்கலடித்து வருகிறார்கள்.
இன்று சட்டசபையில் பேசிய பல எம்.எல்.ஏக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா பேசியபோது ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப்பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார். பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வருவதால் விரைவில் ஜோசியர் அரசு பதவி பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.