1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gokula indra reply to tvk leader vijay

பிளாக்ல டிக்கெட் விக்க வேண்டாம்னு சொல்லுங்க பார்ப்போம்!.. விஜயை விளாசும் கோகுல இந்திரா!.

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெக மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் பேசிய பேசிய போது அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.. ஒரு டபுள் இன்ஜின், ஒரு டப்பா இன்ஜின், இரண்டையும் விட தவெகதான் டாப் என்ஜின் என பேசியிருந்தார். மேலும் அதிமுக ஒரு ஊழல் கட்சி என்றெல்லாம் பேசினார். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா விஜயை விமர்சித்திருக்கிறார்.

நாங்கள்தான் டாப் என்ஜின் என விஜய் சொல்கிறார்.. இவர் டாப் இன்ஜின் என்றால் டாப் என்ஜின் போட்டு, வேகமாக கரூருக்கு சென்றிருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.. என்ஜினை மெதுவாக இயக்கி சூட்டிங் எடுத்து, சூட்டிங் எடுத்து போனதால் 41 பேர் உயிரிழந்து விட்டார்கள்.. அதைப்பற்றி சிந்திக்காமல் இவர் பேசிக்கொண்டிருக்கிறார். சம்பவம் நடந்தவுடனேயே விமானத்தை பிடித்து வீட்டுக்கு போய் பூட்டி கொண்டார்.. இப்படி மக்களை சந்திக்காத ஒரு தம்பி அவர் பெரிய மனிதர் கிடையாது..

அவர் கட்சியில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் பேர் ஏற்கனவே வேறு கட்சிகளில் இருந்தவர்கள்.. இப்போது அவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. மற்ற கட்சிகளில் இருந்து யாரெல்லாம் வெளி வருகிறார்களோ அவர்களுக்கு தூண்டில் போட்டு தனது கட்சியில் சேர்த்து வருகிறார் விஜய்..

இதுதான் எங்களின் கொள்கை.. இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று இதுவரை சொல்லவில்லை.. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.. இதுதான் தன்னுடைய நிலைப்பாடு பற்றி தெளிவாக சொல்ல பயப்படுபவர் விஜய்.. அவர் மற்றவர்களை பற்றி பேசக்கூடாது.
அவரின் படம் வெளியாகும் போது பிளாக்கில் அதிக பணம் கொடுத்து டிக்கெட்டில் வாங்காதீர்கள்.. எனக்கு கட் அவுட், பாலபிஷேகம் செய்யாதீர்கள் என்றெல்லாம் விஜய் சொன்னதில்லை.. எங்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு தம்பிக்கு எந்த அருகதையும் இல்லை என்று பொங்கியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மருத்துவனையில் ஹெச்.ராஜாவை நலம் விசாரித்த ரஜினி!.. வைரல் போட்டோ!...