1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. GK Vasan says DMK will be just opposite party

திமுக எப்போதும் எதிர்கட்சி தான் - ஜி.கே வாசன் பேட்டி!

ஜி கே வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு கிழக்கு தொகுதி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, 

 
தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், சலுகைகளும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து உள்ளது. இதனால் மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையால் அதிமுக கூட்டணி வெற்றி பிரகாசமாகி உள்ளது. 
 
பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் நல்லது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி.
 
தமிழகத்தில் தேர்தலுக்கு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அதிமுக நீடிக்கும். 2-வது அணியாக எதிர்கட்சியாக தான் திமுக விளங்கும் என பேசியுள்ளார். 
About Writer
Sugapriya Prakash