1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MNM candidates suffered from corona

தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கும் வேட்பாளர்கள்! – மநீம அதிர்ச்சி

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதன் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. 135 தொகுதிகளில் மநீம வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இரண்டு தொகுதிகளில் மனு சரிபார்ப்பில் நீக்கப்பட்ட நிலையில் 133 தொகுதிகளில் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் ம.நீ.ம சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பொன்ராஜூக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக வேளச்சேரி மநீம வேட்பாளர் சந்தோஷ்பாபு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றொரு மநீம வேட்பாளரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மய்யத்தார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
50 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!