செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (11:56 IST)

7 மாவட்டங்களில் அதீதம்: தமிழகத்திற்கு எச்சரிக்கை!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல். 

 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனையில் இருக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
ஆம், கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000-த்தை தாண்டியுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.