1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gk vasan boycat nda alliance talk

சீட் பத்தாது!.. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஜிகே வாசன்!..

gk vasan
2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுக -  பாஜக கூட்டணிதான் முதலில் கூட்டணி அமைத்தது. அதன்பின் அந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரன் அமமுக, ஐஜேகே உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்தது. அதேநேரம் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமெ உள்ள நிலையில் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது..

இந்நிநிலையில்தான், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். முடிவில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, டிடிவி தினகரனின் அமுமுகவுக்கு 11 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

மேலும் மற்ற கட்சிகளுக்கு இந்த இரவுக்குள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிடும் என பழனிச்சாமி கூறினார். ஒருபக்கம் இந்த கூட்டணி பேச்சு வார்த்தையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் புறக்கணித்துள்ளார்.  5 தொகுதிகள் கேட்ட நிலையில் மூன்று தொகுதிகளை மட்டுமே தர முடியும் என அதிமுக சொல்லிவிட்டதால் வாசன் அதிர்ச்சி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நம்மகிட்ட 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருக்கு!.. மோடி தகவல்..