திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: திங்கள், 2 மார்ச் 2026 (12:38 IST)

முதலுக்கே மோசம்!.. அதிக தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்!.. அப்செட்டில் பழனிச்சாமி!...

eps
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழக மாநில காங்கிரஸ், அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாதம் உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.. இவற்றில் பெரும்பான்மை சிறிய  கட்சிகள். ஒருபக்கம் திமுக வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது.. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, மதிமுக, தேமுதிக, இந்திய முஸ்லிம் லீக்,  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கிறது.. அதோடு, சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வமும் அந்த கட்சியில் இணைந்து பலம் சேர்த்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை துவங்கி இரண்டு கட்சிகளுக்குள் ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டுவிட்டனர். அதேபோல் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்படியும் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை போன தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு கொடுத்தார்களோ அதே அளவுதான் தொகுதிகளை கொடுக்க முடிவு செய்திருக்கிறது..

ஆனால், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு அதிமுகவில் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.
இது அதிமுகவில் இணைந்திருக்கும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது..

இதற்கு முக்கிய காரணம் இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுமே அதிக தொகுதிகளை கேட்கிறது. அதாவது கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இந்த முறை 35 தொகுதிகளை கேட்கிறது.. அதேபோல் பாமக 18 தொகுதிகளையும். அமமுக 10 தொகுதிகளையும் தாமாக 6 தொகுதிகளையும் கேட்கிறது.. அது மட்டுமல்லாமல் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இரண்டு தொகுதிகள் வரை கேட்கிறது..

இப்படி கூட்டணி தொகுதிகளுக்கு 80 தொகுதிகளை விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு 153 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதன்பின் ஒரு தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவரிடம் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தினார்.. அப்போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத்தெரிகிறது.

எனவே பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்கலாம் என பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறாராம்.. இது தொடர்பாக ஒப்புதலை பெறவே இன்று அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என அதிமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது..