எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுக்கும் பாஜக!.. தொகுதி பங்கீட்டில் இழுபறி!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது.. அதேநேரம் இது பாஜக தலைமையிலான கூட்டணியா? இல்லை அதிமுக தலைமையிலான கூட்டணியா? என்பது தெரியவில்லை.. பாஜகவை பொறுத்தவரை இது தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் சொல்கிறது. அதேபோல் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைவர் என்றோ அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றோ இதுவரை பாஜக எங்கேயும் சொல்லவில்லை.. ஆனால் அதிமுக மட்டும் அதை சொல்லிக் கொண்டிருக்கிறது..
ஒருபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் பல தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்கிறார்கள். எனவே, இதை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுக்கிறார்.. ஏற்கனவே தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தும் அது தோல்வியில் முடிந்தது.. இந்நிலையில்தான் வருகிற 16ம் தேதி மீண்டும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையை துவங்குகிறது.
ஏற்கனவே விஜயின் தவெக அதிமுக - பாஜக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என நம்பி எடப்பாடி பழனிச்சாமி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை துவங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது..