1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. girl molested by a gang in kanniyakumari

இன்ஸ்டா காதலனை நம்பி போன பிளஸ்டூ மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்!.. 4 பேர் கைது!...

gang rape
தற்போதெல்லாம் சிறுவர், சிறுமிகள் கூட செல்போனை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதால் பல குற்றங்களும் நிகழ்கிறது.

குறிப்பாக சில சிறுவர்கள் சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராமில் உரையாடி காதலில் வீழ்த்தி ஒரு இடத்திற்கு வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

இது தொடர்பாக பல செய்திகள் வெளி வந்தாலும் இது போன்ற சம்பவம் இன்னமும் மாறவில்லை. இந்நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனது இன்ஸ்டா காதலனை சந்திக்க சென்றார். அப்போது அந்த சிறுமியின் காதலன் தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதோடு, அதை வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
காருக்குள் மசாஜ்!.. முதியவரிடம் 5 பவுன் நகை பறித்த மதுமிதா?!.. போலீசார் வழக்குப்பதிவு!...