விஜய் சி.எம்.ஆயிட்டார்!.. எனக்கு வருத்தம்!.. சசிக்குமார் ஓப்பன்!...
சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவரின் சுபாவத்துக்கு ஏற்றதுபோல மற்றவர்களுக்கு உதவும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். எல்லோருக்கும் பிடித்த நடிகராகவும் சசிக்குமார் இருக்கிறார்.
இந்நிலையில்தான், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சரானது பற்றி கருத்து தெரிவித்த சசிக்குமார் தவெகவில் சேருவீங்களான்னு என்னிடம் பலரும் கேக்குறாங்க. நமக்கு அரசியல் வராது, அரசியல் தெரியாது. எனக்கு நடிப்பும் இயக்கமும் மட்டுமே தெரியும். விஜய் சாரை வைத்து ஒரு ஹிஸ்டாரிக்கல் படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அந்தக் கதையை அவர்கிட்டேயே சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தது.
படத்தை தயாரிக்க அவரே தயாரிப்பாளரையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். லொக்கேஷன் எல்லாம் போய் பார்த்துட்டு வந்தோம். ஆனா அந்த நேரத்துல பட்ஜெட் ரொம்ப பெருசா இருந்ததால படத்தை பண்ண முடியாம போச்சி... பின்னாடி பண்ணலாம்னு முடிவெடுத்தோம். ஆனா கடைசியில் அந்தப் படம் பண்ண முடியாமலேயே போயிடுச்சு.
அவர் அரசியலுக்கு வந்து முதல்வரானது எனக்கு சந்தோஷம்தான். ஆனால் ஒரு டைரக்டரா அவரை வைத்து அந்தப் படத்தை பண்ண முடியலையேன்னு ஒரு வருத்தம் மட்டும் இருக்கு என அவர் சொல்லியிருக்கிறார்.