இந்த இடத்துக்கு நான் வர பெண்களே காரணம்!.. சட்டசபையில் முதல்வர் விஜய் ஃபீலிங்!..
நடிகர் விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்த போது அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் உருவாகினார்கள். அதன்பின் பல காதல் படங்களிலும் அவர் நடித்தபோது பெண் ரசிகர்கள் அவருக்கு அதிகமானார்கள். ஒரு கட்டத்தில் விஜயை தனது சகோதரனாக, மகனாக பெண்கள் பார்க்க துவங்கினார்கள்.
அதுதான் சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றில் கழகம் அவ்வளவு வாக்குகளை பெறவும் காரணமாக இருந்தது. இந்நிலையில் இன்று, தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது பேசிய முதல்வர் ஜோசப் விஜய் தமிழகத்தில் உள்ள பெண்களுக்காக நான் பேசுகிறேன்.. தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் நிறைய பேர் உள்ளனர்.. எனது நிலைக்கு அம்மா, அக்கா, தங்கை பாட்டிகள்தான் காரணம்.. பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.. 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறார்கள்..
இதுக்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்திற்கும் இப்போ அந்த இடத்திற்கும் முக்கியமான காரணமாக இருப்பதில் என்னுடைய பாட்டி,
அம்மா, அக்கா தங்கைகள்தான் மிகப்பெரிய காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது என பேசினார்.