1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor vishal says actors will come to polytics

அரசியல்வாதிங்க கூத்தடிச்சா கூத்தாடி அரசியலுக்கு வருவான்!.. விஷால் கோபம்...-

vishal
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிதல்ல. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அது இருக்கிறது. இப்போதும் தொடர்கிறது. திமுகவிலிருந்த எம்ஜிஆர் அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுக எனும் கட்சியை தொடங்கி தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக இருந்தார்.

அவருக்கு பின் சினிமா நடிகையாக இருந்த ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றி இந்திய அரசியலில் ஒரு முக்கிய ஆளுமையாக மாறினார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து சினிமா நடிகர்களை கூத்தாடி என்றும் நடிகர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் நடிகர்களுக்கு பின்னால் செல்லும் கூட்டம் ஓட்டாக மாறாது என்றும் தொடர்ந்து கூறி வந்தார்கள். ஆனால் அதை விஜய் பொய்யாக்கி விட்டார்.

இந்நிலையில், இன்று ஒரு விழாவில் கலந்து கொண்ட விஷால் ‘அரசியல்வாதிகள் கூத்தாடித்தனம் பண்ணும் போது கூத்தாடி அரசியலுக்கு வருவாங்க.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வங்கி லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகள் திடீர் மாயம்.. மேனேஜர், ஊழியர்கள் கூட்டு சதியா?