1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former minister Manikandan meet OPS

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

இராமநாதபுரம் எம்எல்ஏ
கடந்த சில நாட்களாக வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை அதிமுக தலைவர்கள் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அக்டோபர் 1ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று திடீரென துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் ஓபிஎஸ் அவர்களை திடீரென சந்தித்துள்ளார். தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வரும் சூழலில் ஓபிஎஸ் உடன் இராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டனின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் ஓபிஎஸ் முதல்வராக இராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
About Writer
siva