தொடர்புடைய செய்திகள்
- தனி மீட்டிங் போட்ட ஓபிஎஸ்: முக்கியஸ்தர்கள் வீட்டில் ஆஜர்!!
- வீட்டு வாடகை கேட்டதால் விபரீதம்: ஹவுஸ் ஓனருக்கு கத்திக்குத்து!
- அனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம்! – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
- முதல்வர் வேட்பாரை அறிவிக்கும் திராணி இல்லை... தங்க தமிழ்செல்வன் விமர்சனம்!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: சென்னையில் மேலும் அதிகரிப்பு
இப்படியே போனா கட்சி அவ்ளோதான்! சமாதான புறாக்களாக மாறிய அமைச்சர்கள்!
நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் – துணை முதல்வர் இடையே ஏற்பட்ட காரச்சாரமான விவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாய் தயாராகி வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று கொரோனா அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து நடந்த முதல்வரின் கூட்டத்தில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ்-ஐ கே.பி.முனுசாமி சந்தித்து பேசி வருகிறார்.
இருவரிடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதத்தால் கட்சிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க அதிமுக அமைச்சர்கள் இருவருக்குமிடையே தொடர் சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
