ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (13:13 IST)

மதுரை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து

மதுரை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து
மதுரை கேகே நகரில் செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ வங்கியில் தீவிபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் வணிக வளாகத்தின் 2 வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து
இந்த தீவிபத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.