திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (13:40 IST)

நீயா பட பாணியில் காத்திருந்து பழிவாங்கிய பாம்பு?

திருபுவனையை சேர்ந்த பெண் ஒருவரை பாம்பு ஒன்று மூன்று மாதமாக கரம் வைத்து கடித்து கொன்ற சம்பவம் அங்குள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையசெய்துள்ளது.
 
திருபுவனையை அடுத்துள்ள கொத்தபுரிந்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் 3 மாதத்திற்கு முன் அங்குள்ள காலி இடத்தில் வீடு கட்டுமான பணி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே லாரியிலிருந்து இருந்து கருங்கற்களை கொட்டும் பணி நடந்தது கொண்டிருந்தது.
 
பாதி கருங்கற்கள் லாரியிலும், பாதி கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், லாரியிலிருந்த கருங்கற்கள் குவியலிலிருந்து ஒரு பாம்பு திடீரென மாரியம்மாளை விரட்டியது. இதனால் அவர் பயந்து ஓடினார். பின்னர் அங்கிருந்தவர்கள் பாம்பை விரட்ட முயற்சித்தனர். ஆனால், பாம்பு எங்கேயோ ஓடிவிட்டது.
 
இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் வீடு கட்டுமான பணி தொடங்கியது. மாரியம்மாள் அங்கே கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த கருங்கற்களில் அடியில் இருந்த வெளிவந்த பாம்பு அவரை கடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரியம்மாளை மூன்று மாதங்களுக்கு முன்னாள் விரட்டிய அதே பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது.