வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (18:16 IST)

பர்சனல் லோன் வாங்குவதற்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை...

அனைத்து வங்கிகளும் பெரும்பாலும், தனி நபர் கடனை வழங்குகின்றன. மக்களுக்கும் தனி நபர் வாங்க வங்கிகளை அணுகத் தொடங்கி விட்டார்கள். 
 
தனி நபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன், கவனிக்க வேண்டிய சில விஷயங்களை காண்போம்..
 
கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்கு முன் உங்கள் தகுதியை தீர்மானித்து கொள்ளுங்கள். உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனி நபர் கடன்கள் வங்கிகள் கருதுவது கிடையாது. 
 
இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. ஏனென்றால் தனிநபர் கடன்கள்தான் வராக்கடன்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தனி நபர் கடன்களின் மீது 11 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வட்டியை நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்கள் உங்கள் தவணையை தீர்மானிக்கும்.
 
கடன் தொகையை பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. இதனால், ஒருமுறை மற்றும் அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். 
 
முன்கூடியே கடனை செலுத்தும்போது கூட வட்டி விகிதத்தை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தக்கூட வட்டி போடப்படுமாம்.