ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (18:13 IST)

வெறிநாய்கள் விரட்டி கடித்து 30 பேர் படுகாயம்- சிவகங்கையில் அதிர்ச்சி

வெறிநாய்கள் விரட்டி கடித்து 30 பேர் படுகாயம்- சிவகங்கையில் அதிர்ச்சி
சிவகங்கையில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரே நாளில் 30 பேர் படுகாயமடைந்த சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது.
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இந்த வெறிநாய்கள்  அங்கு நடைபயிற்சி சென்றவர்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், கடைக்கு சென்ற பெண்கள் உள்ளிட்ட 30 பேரை வெறித்தனமாக கடித்துள்ளது.
 
இதையடுத்து, வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்டவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
வெறிநாய்கள் விரட்டி கடித்து 30 பேர் படுகாயம்- சிவகங்கையில் அதிர்ச்சி
 
அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெறிநாய்களை கட்டுப்படுத்துமாறு மானமதுரை பேரூராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.