ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (11:20 IST)

பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு 3 லட்சம் அபராதம்

பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு 3 லட்சம் அபராதம்
பொய் வழக்கு போட்டு பெண்ணை துன்புறுத்திய போலீஸ்காரர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருள்தாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. இவர் மதுரை அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்து நின்றுவிட்டார்.
 
இந்நிலையில் மதிச்சியம் காவல் நிலைய போலீசார், அரசு மருத்துவமனையில் ஜெயா குழந்தை கடத்தியதாக கூறி அவரிடம் விசாரணை நடத்தினர். ஜெயா அவ்வாறு செய்யவில்லை என அவர்களிடம் விளக்கினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த  இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., செல்வராஜ், அழகுபாண்டி, வித்யபதி ஆகியோர் ஜெயாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு 3 லட்சம் அபராதம்
இதனையடுத்து ஜெயா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். இதனை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், ஜெயாவை துன்புறுத்திய போலீஸ்காரர்கள், ஜெயாவிற்கு மூன்று லட்சம் ரூபாய் நஷ்டைஈடு வழங்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.