தொடர்புடைய செய்திகள்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள்: தேர்தல் ஆணையம்!
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை: தேர்தல் ஆணையம்!
- ஆட்டோ சின்னம்தான் வேணும்னு கேக்கல! – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!
- விஜய் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் கிடையாது! – தேர்தல் ஆணையம் கறார்!
- சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்!
நாம் தமிழர் கட்சி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட நிலையில் அக்கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
