1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (12:43 IST)

விஜய் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் கிடையாது! – தேர்தல் ஆணையம் கறார்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் கேட்ட நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தவிர சுயேச்சைகளுக்கு சுழற்சி முறையில் தனித்தனி சின்னங்களே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.