நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை: தேர்தல் ஆணையம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஊரக உள்ளாட்சி பதவியில் உள்ளவர்கள் சிலர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தால் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது